முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

காட்மாண்டு - நேபாளத்தில் மலைகள் நிறைந்த மேற்குப் பகுதியில் உள்ள ஓர் ஆற்றில் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 45 பயணிகளுடன் சென்ற இந்த பஸ், ஜார்கோட் பகுதியில் சென்றபோது குறுகலான சாலையிலிருந்து விலகி பேரி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நீச்சல் வீரர்கள், போலீஸார் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 2 குழந்தைகள் உட்பட 5 சடலங்கள் கிடைத்துள்ளதாக ஜஜார்கோட் காவல் துறை உயர் அதிகாரி தினேஷ் ராஜ் மைநாலி நேற்று மதியம் தெரிவித்தார்.
மேலும் உயிருடன் மீட்கப்பட்ட 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து, மற்றொரு காவல் துறை உயர் அதிகாரி ஷேர் பகதூர் சவுத்ரி கூறும்போது, “இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், அதிகாரப்பூர்வ பயணிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களைவிட கூடுதல் பயணிகள் பஸ்ஸில் பயணம் செய்திருக்க வாய்ப்பிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து