முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

நியூயார்க் - ஐ.நா.வில் சேர்ந்துள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தப் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஐ.நா. சபை சார்பில் நாடாளு மன்றங்களின் சபாநாயகர்கள் மாநாடு நியூயார்க்கில் நடைபெற்றது. இம் மாநாட்டில் இந்திய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசியதாவது:
1945-ம் ஆண்டு ஐ.நா. சபை தொடங்கப்பட்டபோது 51 உறுப்பு நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது 193 உறுப்பு நாடுகள் உள்ளன. தொடக்க காலத்தில் ஐ.நா. சபையில் 3 ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே இருந்தன. இப்போது 54 ஆப்பிரிக்க நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்பிரிக்க நாடு களுக்கு போதிய பிரதிநிதித் துவம் அளிக்கப்படவில்லை. உறுப்பு நாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும். 2010-ம் ஆண்டில் ஐ.நா. சபை யின் 65-வது ஆண்டு தினம் கொண் டாடப்பட்டது. அப்போது பாது காப்பு கவுன்சிலில் சீர்திருத்தங் கள் மேற்கொள்ள தீர்மானிக்கப் பட்டது. ஆனால் அந்த சீர்திருத் தங்கள் இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை.
வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு ஒரு வரைமுறையை உருவாக்க வேண்டும். கவுன்சில் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்போது அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சாத், சிலி, ஜோர் டான், லிதுவேனியா, லக்சம்பர்க், நைஜீரியா, ரூவாண்டா, தென் கொரியா ஆகியவை நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக உள்ளன. இவற்றின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து