முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36 ஆண்டுகளுக்குப் பின் 142 அடியை எட்டிய முல்லை அணை!

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

தேனி - 36 ஆண்டுகளுக்குப் பின் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை 2 மணியளவில் விவசாயிகளின் கனவு இலக்கான 142 அடியை தொட்டது. இவ்வாறு நீர்மட்டம் உயர்ந்ததை தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நீர்மட்டம் 136 அடியை தாண்டியநிலையில், 20 நாட்களுக்குப் பிறகு தற்போது நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது.
இத்தகவலை உறுதிசெய்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், சரியாக அதிகாலை 2.30 மணியளவில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததாக தெரிவித்தனர். அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துளை அதிகாரிகள் கூறினர்.
அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததையடுத்து, 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு இடுக்கி மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற இறதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் மகத்தான வெற்றி கண்டார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி கெஜட்டில் வெளியிடப்பட்டது. இது தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்குகிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் சாதனை என்று ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். அதன் பிறகு என்எல்சி பிரச்சினையிலும் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. இப்படி அடுக்கடுக்கான வெற்றிகளை பெற்று சாதனை படைத்த ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விஷயத்திலும் பல்வேறு சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார். அதை தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் அதை கெடுக்கும் விதமாக அணை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் கேரள அரசு ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. இதையும் எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தமிழகத்தின் தரப்பில் வலுவான ஆதாரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்தது.அதாவது, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். இதற்கு கேரள அரசு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டது.இது மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த மற்றொரு மகத்தான வெற்றியாகும். இதற்காக அவருக்கு மதுரையில் மாபெரும் பாராட்டுவிழாவும் நடத்தப்பட்டது. விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர். இந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டனர். சில வாரங்களுக்கு முன்னர் அணையின் ஷட்டர்கள் இறக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 36 ஆண்டுகளுக்கு பிறகு முதலில் 138 அடியை தொட்ட பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 140 அடியைதொட்டது.அதன் பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்ததை அடுத்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தமிழக மக்களின் இலக்கான 142 அடியை தொட்டது. இதன் மூலம் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளது. இந்த கனவை நனவாக்க பெரிதும் உதவியவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதாதான் என்று விவசாயிகள் மனமார பாராட்டிவருகிறார்கள். காரணம், பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி காவிரி பிரச்சினையில் வெற்றி கண்டதை போல முல்லை பெரியாறு பிரச்சினையிலும் வெற்றி கண்டிருக்கிறார் ஜெயலலிதா. இதை ஒவ்வொரு விவசாயியும் சொல்லிச் சொல்லி பெருமைப்படுகிறார்கள். 142 அடியை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொட்டதன் மூலம் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் பலனடையும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. தென் மாவட்ட மக்களின் வயிற்றில் பால்வார்த்த ஜெயலலிதாவுக்கு விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த அணையை தனது சொத்துக்களையே விற்று கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக். அவருக்கு தேனி மாவட்டத்தில் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவாலயம் தற்போது வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டதற்கே பென்னிகுவிக்தான் காரணம். அதனால்தான் அவருக்கு நினைவாலயம் அமைத்தார் ஜெயலலிதா. இதனிடையே பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக எட்டியதை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினரும் அதை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிவருகிறார்கள். அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததற்கு மூல காரணம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவேன். அது வரை ஓய மாட்டேன் என்று ஒரு முறை மக்களின் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து