முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்: பிரதமர்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஜனநாயக நாடாக ஆப்கானிஸ்தான் உருவாவதற்காக, அங்கு அமைந்துள்ள புதிய அரசுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாயை வரவேற்ற மோடி, இந்திய-ஆப்கானிஸ்தான் உறவு வலிமையாக இருப்பதற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்த கர்சாய்க்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், தேசிய ஒருமைப்பாட்டுடன் புதிய அரசு அமைவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மேம்பாடு தொடர்பாக மோடியுடன், ஹமீது கர்சாய் விவாதித்தார். ‘இந்திய-ஆப்கானிஸ்தான் நட்பு காலத்தை வென்றது’ என கர்சாய் தெரிவித்தார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில், ஆப்கன் புதிய அதிபர் அஷ்ரப் கானியைச் சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து