முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவி புவியியலாளர் பதவிக்கான அறிவிக்கை

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு தொழிற் சார்நிலைப் பணியிலுள்ள உதவி புவியியலாளர் (ASSISTANT GEOLOGIST) பதவியில் ஒரு காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையினை 21.11.2014 அன்று வெளியிட்டுள்ளது. புவியியலில் (GEOLOGY)முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.net என்ற முகவரியில் இணைய வழியில் (ONLINE) மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். இப்பதவிக்கான கணினி வழித்தேர்வு 01.02.2015 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 17.12.2014. மேலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பதவிக்கான வயதுவரம்பு, கல்வித்தகுதி, அனுபவத்தகுதி, பொதுவான தகவல்கள், எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு மையம், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தடையின்மைச் சான்று, சலுகைகள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து