முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயகம் திரும்பிய மீனவர்களுக்கு தலா ரூ3 லட்சம் உதவி

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

தாயகம் திரும்பிய மீனவர்களுக்கு தலா ரூ3 லட்சம் உதவி.

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட இடைவிடாத தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவே இலங்கை யில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவர்களின் புது வாழ்க்கை பயணத்திற்காக தலா ரூ 3 லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாட்டில்உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் இம்மீனவர்களின் குடும்பங்கள், வருமானம் ஈட்டித் தரும் தங்கள் குடும்பத் தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில், அன்றாட குடும்பச் செலவிற்கு வருமானமின்றி துன்பப்படுவதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் குடும்பம் ஒன்றிற்கு அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து முன்தேதியிட்டு மாதந்தோறும் 7,500/- ரூபாய் வழங்கிட 6.8.2012 அன்று ஆணையிட்டார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின் அடிப்படையில் மேற்படி ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 2,44,000/- ரூபாய் வீதம் மொத்தம் 12,20,000/- ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
பொய் வழக்கில் சிக்கி அல்லலுறும் ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், இக் குடும்பங்களின் பொருளாதார நிலையைக் கருணையுடன் பரிசீலித்து ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, நிவாரண உதவித் தொகையாக தலா ரூபாய் இரண்டு லட்சம் வீதம் மொத்தம் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஐந்து மீனவர்களின் குடும்பத்தினருக்கும் 13.12.2012 அன்று வழங்கினார்கள்.
இந்த ஐந்து மீனவர்களை மீட்டெடுக்கும் உறுதியுடன் பல்வேறு ராஜாங்க மற்றும் சட்ட ரீதியான தொடர் நடவடிக்கைகளை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டார்கள். இந்த வழக்கினை தொய்வின்றி நடத்திடும் பொருட்டு கூடுதல் நிதியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கிட 8.2.2013 அன்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள்.
அதாவது, வழக்குச் செலவிற்காக மட்டும் மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4,49,000/-ரூபாய் வீதம் 27,45,000/- ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேல்முறையீட்டுக்காக வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் வழங்கப்பட்ட தொகை 47,45,000/- ரூபாய்.
ஐந்து மீனவர்களின் கைதுக்குப் பின்னர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு, மீனவர்கள் கைது மற்றும் தாக்குதல் தொடர்பாக எழுதியுள்ள 9 கடிதங்களில், பொய்யாக புனையப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு அல்லலுறும் மீனவர்களின் நிலையையும், அவர்களின்றி வாடும் அவர்களது குடும்பங்களின் பரிதாப நிலையினையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் நேரிடை கவனத்திற்கு கொண்டு சென்று, ஏதுமறியா அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவித்து அவர்களது குடும்பங்களுடன் ஒன்று சேர்த்திட உயர் மட்ட தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்கள்.
இலங்கை-தமிழக மீனவர்களுக்கிடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் 12-5-2014 அன்று நடைபெற்ற போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின் அடிப்படையில் தமிழகம் சார்பில் இலங்கை- தமிழ்நாடு மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மீனவ பிரதிநிதிகள் குழு மற்றும் அரசு அலுவலர்கள் இலங்கையின் வெளிக்கடை சிறையில் வாடும் மேற்படி ஐந்து மீனவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அவர்கள் அம்மீனவர்களை விடுவிப்பதற்காக மேற்கொள்ளும் அனைத்து தொடர் நடவடிக்கைகளையும் எடுத்துக்கூறி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
போதைப் பொருள் கடத்தியதாக புனையப்பட்ட வழக்கில் 5 அப்பாவி தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் 30.10.2014 அன்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக 5 அப்பாவி தமிழக மீனவர்களின் உயிரினை காக்கவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் மத்திய அரசினை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் உரிய மேல் முறையீடு செய்திட இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தினை பணிக்கவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதன் விளைவாக இலங்கை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வழக்கினை நடத்திட கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவினை இறுதி செய்தது. இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குச் செலவுக்காக 20 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியது.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட இடைவிடா தொடர் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின்படி 5 மீனவர்களும் இலங்கை அரசால் 19.11.2014 அன்று விடுவிக்கப்பட்டு 20.11.2014 அன்று தாயகம் திரும்பியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையம் வந்தந்தடைந்த போது, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் திருமதி. பா.வளர்மதி, மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

மேலும் அப்போது இந்த 5 மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசின் சார்பில் வழங்கினர். விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் அவர்களது சொந்த ஊருக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மேற்கொண்டஇடைவிடா தொடர் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின்படி5 மீனவர்களும் இலங்கை அரசால் 19.11.2014 அன்று விடுவிக்கப்பட்டு 20.11.2014 அன்றுதாயகம் திரும்பியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை விமானநிலையம் வந்தந்தடைந்த போது , சமூக நலத் துறை அமைச்சர் . பா.வளர்மதி, மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ்.சுந்தரராஜ் ஆகியோர்அவர்களை வரவேற்றனர்.
மேலும் அப்போது இந்த 5 மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாகதொடங்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையைதமிழக அரசின் சார்பில் வழங்கினர். விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் அவர்களதுசொந்த ஊருக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு மீனவர்களின் நலன் காப்பதில் எப்போதும் முன் நிற்பவர் புரட்சித்தலைவி தான். மீனவர்கள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவது அஇஅதிமுக அரசு தான். இலங்கை அரசால் பொய் வழக்கு போடப்பட்ட உடனேயே,அந்தப் பொய் வழக்கினை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்எடுத்தது புரட்சித்தலைவி அம்மா தான். இது பன்னாட்டுப் பிரச்சனை என்றகாரணத்தால், இலங்கை அரசுடன் தமிழ்நாடு அரசு நேரடியாக எந்த விதத்திலும் தொடர்புகொள்ள இயலாது. இலங்கை அரசுடன் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் மட்டுமேதொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும். தனது இந்தத் தார்மீகக் கடமையை மத்தியஅரசு செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் புரட்சித்தலைவியும் , தமிழ்நாடு அரசும் ஆகும். அதற்கேற்ப, மத்திய அரசு செயல்பட்டு, 5 தமிழ்நாடுமீனவர்களும் விடுதலை பெற்றது மகிழ்ச்சிக்கு உரியதாகும். இந்த வேளையில், தமிழ்நாட்டில்உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனைஅளிக்கக்கூடியது. 5 மீனவர்களின் விடுதலைக்குத் தாங்கள் தான் காரணமென இங்கே உள்ளஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழ்நாட்டு மீனவர்களை கொச்சைப்படுத்துவது ஆகும்.தங்களால் தான் இது நடைபெற்றது என்று இங்கே தமிழ்நாட்டில் கூறிக்கொள்ளும் ஒரு சிலர்,கடந்த மூன்றாண்டுகளாக இது பற்றி என்ன நடவடிக்கை எடுத்தனர்? இலங்கைஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு உடனடியாக தாக்கல் செய்யப்பட 20 லட்சம் ரூபாய்அனுப்பும்படி இந்திய தூதரகம் கேட்ட போது, அந்தப் பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தது,
மீனவர் நலனில் என்றும் அக்கறை செலுத்தும் அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள்வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பினை அர்ப்பணிப்பு உணர்வுடன்செயல்படுத்தும் ஒரே இயக்கம் அஇஅதிமுக தான்; ஒரே அரசு அஇஅதிமுக அரசு தான்.மீனவர்களின் நலனுக்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது அனைத்து நடவடிக்கைகளையும்எடுக்கும் அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் எந்தவித இன்னலுக்கு ஆட்பட்டாலும்,ஓடோடிச் சென்று, அவர்கள் துயர்துடைப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பேணிப்பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அஇஅதிமுக அரசுதான். உண்மையான மீனவ நண்பன் யார்என்பதும் தமிழ்நாடு மீனவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாடு மீனவர்கள் நலன் காக்கதமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து