முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முதல்வராக வேண்டி 90 தர்காக்களில் சிறப்பு பிராத்தனை

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஊட்டி - அ.இ.அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் விரைவில் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி இந்தியா முழுவதும் 90 தர்காக்களில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட உள்ளதாக அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் கூறினார்.
அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா விரைவில் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி ஞிலகிரி மாவட்ட அ.தி.மு.கழகம் சார்பில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு ஞீஜைகள், பிராத்தனைகள், தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் ஊட்டி கோரிசோலை பகுதியில் அமைந்துள்ள ஹஸரத் செய்யது ஹரக்ஷா காதிரு பாவா தர்காவில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் தர்காவில் மலர் போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும், தாட்கோ வாரியத்தலைவருமான எஸ்.கலைச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனைக்குப்பின், வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:_
அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் அம்மாமீது சில விஷமிகளால் பொய்வழக்கு போடப்பட்டுள்ளதில் இருந்து தன்னை நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டி இந்தியா முழுவதும் உள்ள 10 மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அஜ்மீர் முதல் நாகூர் வரையுள்ள 90 தர்காக்களில் சிறப்பு பிராத்தனை(துவா) செய்து வருகிறோம். இன்று(நேற்று) ஊட்டியில் 67_வது தர்காவில் சிறப்பு பிராத்தனை நடத்தியுள்ளோம். இப்பிராத்தனையில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு மக்களின் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டி பிராத்தனை செய்தனர். முதன் முதலாக அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிராத்தனையை ஆரம்பித்தோம். 90_வது சிறப்பு பிராத்தனையை நாகூர் தர்காவில் நிறைவு செய்ய உள்ளோம்.
தமிழகம் முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி அளவிற்கு வக்பு வாரிய சொத்துக்கள் உள்ளன. இதில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.650 கோடி அளவிற்கு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. சென்னையில் தி.மு.க.,வைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.250 கோடி அளவிற்கு
ஆக்கிரமித்துள்ளார். மக்களின் முதல்வர் அம்மாவின் வழிகாட்டுதலின்படி ஆக்கிரக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
1954ம் ஆண்டு வக்பு வாரியம் இந்திய முழுவதும் துவங்கப்பட்டு, அந்தந்த மாநில அரசின் கீழ் இயங்கி வருகிறது. தமிழகத்தில் வக்பு வாரியம் மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறது. வக்பு வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, மேல்கல்விக்கு செல்வதற்கு உதவித்தொகை என 300 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கழக செயலாளரும், தாட்கோ வாரியத்தலைவருமான எஸ்.கலைச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சிறப்பு பிராத்தனையில் நகர செயலாளர் தேவராஜ், நகர்மன்ற தலைவர் சத்யபாமா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் கே.ஆர்.ஆல்தொரை, மனோகரன், ஒன்றிய செயலாளர் குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமார், ஞிலகிரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெள்ளி, கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் கண்ணபிரான், ஞிலகிரி கூட்டுறவு நிறுவனதலைவர் வினோத், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் ராஜகோபால்(தொழிற்சங்கம்), கோட்டக்கல் சீனிவாசன்(இலக்கிய அணி), சரவணகுமார்(மாணரவணி), கோடநாடு ஊராட்சி தலைவர் தேவராஜ்,முக்தார்,தீட்டுக்கல் சுரேஷ், அமீர்சேட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து