முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முலாயம் சிங் பிறந்த நாளுக்காக லண்டனில் தயாரான கேக்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

லக்னோ - உத்திரபிரதேத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங்கின் 76வது பிறந்த நாளை மிகவும் கோலகலமாக கொண்டாட கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 75 அடி நீள கேக் மற்றும் விக்டோரியா மகாராணி காலத்து சாரட் வண்டி ஆகியவற்றை இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், முலாயம் சிங்கின் பிறந்த தினத்தை மிகவும் உற்சாகமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராம்பூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று பிற்பகல் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட குடுபத்தினருடன் முலாயம் சிங் ராம்பூர் வருகிறார். நேற்று அதிகாலை பிறந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது.
மேலும் இதுகுறித்து கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், இதற்காக லண்டனில் இருந்து விக்டோரியா மகாராணி காலத்தின் சாரட் வண்டி வரவழைக்கப்பட்டது. அதில் முலாயம் சிங்கும், அவரது நெருங்கிய அரசியல் நண்பருமான அசம் கானும் அமர வைக்கப்பட்டு மேள தாளம், வாண வேடிக்கையுடன் சிஆர்சிஎப் மைதானத்தில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு கலை நிகழச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் உத்தரகண்ட் கவர்னர் ஆசிஸ் குரேஷி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து