முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகெரியா

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

சியோல் - தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
வடகொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் எடுத்து செல்ல வேண்டும் எனவும் ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வட கொரியா, இதற்கு பதிலடியாக அணு ஆயுத பரிசோதனையை நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தது. இது குறித்து வட கொரிய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
அமெரிக்காவின் தூண்டுதலின் பேரிலேயே ஐரோப்பிய யூனியனும், ஜப்பானும் எங்களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தன. இது போன்ற தீர்மானங்கள் பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்த தீர்மானத்துக்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவுக்கு எதிரான எங்களது படை பலத்தை மேலும் அதிகரிப்போம். நாங்கள் மேலும் ஒரு அணு ஆயுத பரிசோதனை நடத்துவதை இது போன்ற தீர்மானங்களால் தடுத்து நிறுத்தி விட முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து