முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக அழைத்தால் சேருவேன்: நடிகர் சுமன்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

நகரி - தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக இருக்கும் நடிகர் சுமன் தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக உள்ளார். திருப்பதிக்கு வந்த அவர் சுவாமி தரிசனத்துக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது,
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தெலுங்குதேசம் கட்சியில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். ஆனால் கட்சியில் எனக்கு உரிய மரியாதை இல்லை. என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனக்கு உரிய மரியாதை அளிக்காதது வேதனையளிக்கிறது. இனிமேல் நான் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். பிரதமர் மோடியின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது. பாரதீ ய ஜனதா கட்சியினர் அழைத்தால் அந்த கட்சியில் சேர தயாராக உள்ளேன். எனது அரசியல் வாழ்க்கை மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முன்னேற தனியாக சட்டம் கொண்டு வர முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து