முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் 4 கணவர்களை கொன்ற 67 வயது பெண் கைது

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

டோக்கியோ - ஜப்பானில் 4 கணவர்களை கொன்ற 67 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
ஜப்பானைச் சேர்ந்த சிஸாகோ ககேஹி, முன்னாள் வங்கி ஊழியர் ஆவார். இவருடைய பொழுதுபோக்கே குடும்பத்தினரை விட்டுத் தனியாகப் பிரிந்து வாழும், ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்ட வயதான ஆண்களை மணமுடிப்பது தான்.
அவ்வாறு மணமுடித்து சில மாதங்களில் தன் கணவரை கொன்றுவிடுவார். பின்னர் அந்தக் கொலையை இயற்கையான மரணத்தைப் போல் சித்தரித்து விடுவார். பின்னர், தன் கணவரின் ஆயுள் காப்பீட்டுத் தொகை மற்றும் இதர முதலீடுகள், சொத்துகள் எல்லாம் தன் கைக்கு வந்தவுடன் வேறு ஓர் ஆண் துணையைத் தேடிச் செல்வார்.
அவர் இதுவரை 6 ஆண்களுடன் நட்பு கொண்டிருந் ததாக தெரிகிறது. சமீபத்தில் அவரது நான்காவது கணவர் திடீரென்று மரணமடைந்தார். இதுதொடர்பாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ககேஹியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, ககேஹி தனது கணவருக்கு சயனைட் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரின் இதர ஆண் நண்பர்களின் கதி என்ன என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து