முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலிவுட்டை காஷ்மீருக்கு கொண்டு வருவேன்: மோடி

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

ஜம்மு - காஷ்மீரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றி பாலிவுட்டை தங்களது படப்பிடிப்புக்காக காஷ்மீரை தேடி வரச் செய்வேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் கிஸ்தூவாரில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக-வுக்கு ஆதரவாக தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "காஷ்மீர் மாநிலம் செழுமையானது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒரு காலத்தில் படப்பிடிப்பு நடத்த பாலிவுட் இயக்குநர்கள் ஆர்வத்தோடு காஷ்மீர் தேடி வந்தனர். இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. காஷ்மீர் அழகை உலக மக்கள் பல பாடல் மற்றும் பட காட்சிகளில் பார்த்திருக்கின்றனர். ஆனால் இப்போது அவர்கள் காஷ்மீர் பக்கம் வருவதில்லை. அவர்கள் அனைவரையும் திரும்ப வர வைப்பேன்.
சுற்றுலா போல வேகமாக வளர்ந்து வரும் தொழில் வேறு எதுவும் இல்லை. ஜம்மு-காஷ்மீரை உலகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து