முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தொங்கு சட்டசபை: கருத்துக் கணிப்பு

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - சட்டப்பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 5 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் நாளை 25ம் தேதி தொடங்குகிறது. தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார். இந்நிலையில் தேர்தலில் இந்த கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இது மட்டுமின்றி பாஜ, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 87 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்திய தனியார் தொலைக்காட்சி ஒன்று எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சிக்கு 31 முதல் 3 6 இடங்கள் வரையும், பாஜகவுக்கு 23 முதல் 28 இடங்கள், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி 7 முதல் 11 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 12 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் கூ ட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்நிலையில் இந்த தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 42 முதல் 46 இடங்கள் வரையும், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 14 முதல் 18 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 37 இடங்கள் வரையும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு 23 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக சுமார் 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து