முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியுடன் சேர்ந்து வாழத்தயார்: யசோதா பென்

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

மும்பை - பிரதமர் விரும்பி அழைத்து சென்றால் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக அவரது மனைவி யசோதா பென் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது வதோதரா தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தனது வேட்பு மனுவில் தனக்கு மனைவி இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு முந்தைய தேர்தல்களில் இந்த தகவலை மறைத்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் மோடியின் மனைவி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாயின.
குஜராத்தை சேர்ந்த யசோதாபென் என்பவருக்கும் மோடிக்கும் கடந்த 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்தார். தற்போது 62 வயதான யசோதா பென் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றார். குஜராத்தில் உள்ள ஐஸ்வர்வாடா என்ற கிராமத்தில் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். தேர்தலின் போது ஊடகங்களின் வெளிச்சம் இவர் மீது படவே சிறிது காலம் தீர்த்த யாத்திரை செல்வதாக கூறி தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் மும்பையில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. பிரதமரின் மனைவி என்பதால் அவருக்கு கமாண்டோ படை பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனியார் டி.வி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி விரும்பினால் அவருடன் சேர்ந்து வாழ நான் தயாராக இருக்கிறேன். அவர் வந்து என்னை அழைத்து சென்றால் அவருடன் செல்ல தயார் என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து