முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வசதி படைத்தவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - வசதி படைத்தவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
வசதி படைத்தவர்கள் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் பெற தகுதியுடையவர்களா என்பதே இந்தியா அடுத்து எடுக்கவிருக்கும் முக்கியமான முடிவாக இருக்கும். இத்தகைய மானியங்களுக்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்று விரைவில் நாம் முடிவு எடுப்பது நமது அமைப்புக்கு நல்லது. இத்தகைய முடிவுகள், அரசின் செயல் திட்டத்தில் உள்ளன.
அரசியல் தலைமையானது குறிப்பாக பிரதமர் முடிவெடுக்கும் திறனை பெற்றிருந்தால் சிக்கலான முடிவுகளையும் எடுப்பது சுலபமாகி விடும். நிலக்கரி சுரங்கங்கள் குறித்து முடிவெடுக்கவோ, அலைக்கற்றை அல்லது இயற்கை வளங்கள் அல்லது டீசல் விலை நிர்ணயம் போன்றவை குறித்து முடிவெடுக்கவோ இனி யாரும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை.
இவற்றின் சில முடிவுகள் கடந்த சில ஆண்டுகளாக சிக்கல் நிறைந்தவையாக இருந்தன. ஆனால் தற்போதைய மத்திய அரசு நேரத்தை வீணாக்காமல் இந்த விவகாரங்கள் தொடர்பாக எளிதாக முடிவெடுத்து விட்டது. இதே போன்ற செயல் திட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவோம். இந்தியா தற்போது முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் நம் நாட்டை புதிய ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். சரக்கு சேவை வரி தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பான அரசமைப்பு சட்டத்தில் இருந்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்று அருண்ஜெட்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து