முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் தடுப்பணை: உமாபாரதிக்கு தமிழிசை கடிதம்

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்டா பகுதி விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 24–ந்தேதி முழு அடைப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் காவிரியில் தடுப்பணை கட்டுவது அவசியம். குடிநீர் திட்டத்துக்காக தடுப்பணைகள் கட்டும் கர்நாடகத்தின் முடிவை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் முதல்–மந்திரி சீதாராமையா டெல்லி சென்று தடுப்பணைகள் கட்டுவதன் அவசியம் பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
அனந்தகுமாரின் கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வள மந்திரி உமாபாரதிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் கர்நாடக அரசு ஈடுபட அனுமதிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று டெல்லி சென்றுள்ள டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் இது குறித்து மத்திய மந்திரி உமாபாரதியை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து