முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிசிசிஐ தலைவராக மீண்டும் நியமிக்கக் கோரி சீனிவாசன் மனு

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக தன்னை மீண்டும் நியமிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை என்று முத்கல் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவித்ததையடுத்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக என் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதும், தவறான உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்டவை என்பதும் ஆணையத்தின் அறிக்கை மூலம் நிரூபணமாகி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது 3 வீரர்கள் விதிகளை மீறியது தெரிந்தும் அவர்கள் மீது நானும் பிசிசிஐ அமைப்பை சேர்ந்த மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிசிசிஐயின் அப்போதைய தலைவர் பதவியில் சஷாங்க் மனோகர் இருந்ததால் என்னால் அந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனினும் அந்த சம்பவங்களுக்கு சஷாங்க் மனோகர் நடவடிக்கை எடுத்தார். மேலும் ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது முக்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடையாக இருந்தது உள்ளிட்ட புகார்களில் எனக்கு தொடர்பு இல்லை என்பது தெளிவாகி விட்டது.
இந்நிலையில் தவறான உள்நோக்கம் கொண்ட புகார்களால் ஏறத்தாழ எனது ஓராண்டு பதவிக்காலத்தை இழந்து விட்டேன். எனவே பிசிசிஐ தலைவராக என்னை மீண்டும் நியமித்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் மேலும் ஒரு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதகமான எந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தாலும் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கே பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து