முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை விரிவாக்கத்தில் சிவசேனாக்கு இடம்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மும்பை - அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அதில் சிவசேனா இடம்பெற வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர மாநில பொதப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பட்டீல் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 122 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அதிக இடங்களை பிடித்திருந்தாலும் ஆட்சி அமைக்க பாஜவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இந்நிலையில், முதல்வராக பத்னாவிஸ் பொறுப்பேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தானாக முன்வந்து பாஜவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியது. நீண்டநாள் கூட்டணியான சிவசேனா, பாஜவுடன் கூட்டணி வைக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
இந்நிலையில், குரல்வாக்கெடுப்பு மூலம் பாஜ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், மீண்டும் தேர்தலுக்கு தயாராகுமாறு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தனது கட்சியினரை கேட்டுக் கொண்டார். பின்னர், எங்களால் அரசுக்கு ஆபத்து ஏற்படாது என தெரிவித்தார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜ, சிவசேனா இடையே மோதல் தொடர்ந்துவந்த நிலையில், சிவசேனா எங்களின் நண்பனாகத்தான் இருந்து வருகிறார்கள், என்று எதிர்காலத்திலும் நண்பரகளாக இருப்பார்கள், என நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பத்னாவிஸ் பேசினார். இதற்கிடையே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சந்தித்து பேசியுள்ளார். பாஜ, சிவசேனா இடையே தற்போது சுமூகமாக உறவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பட்டீல் அளித்த பேட்டியில், சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8-ஆம் தேதி தொடங்குகிறது. வருகிற 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த அமைச்சரவையில் சிவசேனா உடம்பெற வாய்ப்புள்ளது. மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய எங்களுடன் சிவசேனா சேர வேண்டும் என விரும்புகிறோம். இது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும் என்றார்.
இது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவர்கள் கூறுகையில், துணை முதல்வர் பதவி, முக்கிய இலாக்காக்கள் வழங்க வேண்டும். முக்கியமாக பாஜ எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். பாஜவுடன் இணைவது குறித்து இறுதி முடிவை தலைவர் உத்தவ் தாக்கரே தான் எடுப்பார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து