முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரத்தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - வடகிழக்குப் பருவமழை நன்கு பெய்து அணைகளில் போதுமான அளவு நீர் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நடப்பு சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இரசாயன உரம், யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் யூரியா 50 கிலோ மூடை 270 ரூபாய்க்கும், டி.ஏ.பி 1125 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு வேளாண்மை கூட்டுறவு மையங்களில் உரங்கள் போதிய இருப்பு இல்லாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உரத்தட்டுப்பாடு காரணமாக வெளிச்சந்தையில் தனியார் உர நிறுவனங்களை விவசாயிகள் நாடுகின்றனர். ஆனால், ரூ 820க்கு விற்பனையான பாக்டம்பாÞ 1500 ரூபாய்க்கும், யூரியா விலை 500 ரூபாய்க்கும், டி.ஏ.பி விலை 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்து தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிக்கின்றன. கூடுதல் பணம் கொடுத்து யூரியா உரம் வாங்கிட விவசாயிகள் முன்வந்தாலும், தனியார் உர விற்பனையாளர்கள் உர மூட்டைகளை பதுக்கி வைப்பதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
பருவ மழையை நம்பி தாளடி, சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் யூரியா உரம் கிடைக்காமல், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள். விவசாயிகளின் தேவைகளை அறிந்து தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்காமல், வழக்கம்போல வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடு இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
இதனால் காவிரி படுகை விவசாயிகளும் இதர மாவட்ட விவசாயிகளும் கொந்தளித்து போராட்டங்களில் இறங்கி உள்ளனர். தமிழக அரசின் மெத்தனப் போக்கால் கடந்த இரண்டு மாதகாலமாக அனைத்துத் துறைகளிலும் தேக்கநிலை காணப்படுகிறது. இதற்கு வேளாண்மைத்துறையும் விதிவிலக்கல்ல என்பதை, உரத்தட்டுப்பாடு குறித்து அதிமுக அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்காமல் செயலற்று கிடப்பதன் மூலம் தெரியவருகிறது.
விவசாயிகளின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்திய அரசின் உரக்கொள்கையும் ஒரு காரணம் ஆகும். யூரியா தயாரிக்க தேவையான ‘நாஃப்தா’வை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சலுகை விலையில் உரத் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வந்தது. பா.ஜ.க அரசு பதவி ஏற்ற பின்னர் ‘நாஃப்தா’ அளிக்கப்பட்டு வந்ததை நிறுத்திய காரணத்தால், தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கிவந்த மெட்ராÞ உரத்தொழிற்சாலை, கர்நாடகாவில் மங்களூர் உரத்தொழிற்சாலை, ‘Þபிக்’ நிறுவனம் போன்ற உரத் தொழிற்சாலைகளில் யூரியா உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டன.
இதன் காரணமாக நாடு முழுவதும் உரத்தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமின்றி, மத்திய அரசின் உரமானியம் வெட்டப்படுவதால் இரசாயன உரங்கள், யூரியா போன்றவற்றின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து விவசாயிகள் அல்லல்படும் அவல நிலைக்கு தள்ளப்படுவர். நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் வேளாண்மைத்துறைக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து, விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்வருவதுடன், யூரியா, உரத்தட்டுப்பாட்டை போக்கி, விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து