முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் பிணை கைதியின் புதிய வீடியோ வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

லண்டன் - இஸ்லாமிய தேச(ஐஎஸ்) பயங்கரவாதிகளிடம் பிணை கைதியாக உள்ள பிரிட்டன் செய்தியாளர் ஜான் கேன்ட்லீ இடம் பெற்றுள்ள புதிய வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சிரியாவி்ல் கடத்தப்பட்ட அவர் தம்மையும், தம்முடன் கடத்தப்பட்ட பிற பிணை கைதிகளையும் விடுவிக்க அமெரிக்கா தவறி விட்டதாக கூறினார். காது கொடுத்து கேளுங்கள் என்ற தலைப்பில் கேன்ட்லீ இடம் பெற்று வெளியாகும் வீடியோ வரிசையில் ஏழாவது வீடியோ இது. முந்தைய வீடியோக்களை போலவே ஆரஞ்சு நிற உடையணிந்து மேஜை ஒன்றின் பின் அமர்ந்து எழுதி கொடுக்கப்பட்ட வாசகங்களை ஜான் கேன்ட்லீ படிக்கும் காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
அந்த ஒன்பது நிமிட வீடியோவில் கேன்ட்லீ வாசித்ததாவது, பிணை கைதியாக உள்ள என்னை மீட்பதற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அமெரிக்க சுதந்திர தினமான கடந்த ஜூலை 4ம் தேதி அந்நாட்டினர் ஐ.எஸ்.ஸிடம் இருந்து பிணை கைதிகளை விடுவிக்க முயற்சி மேற்கொண்டார்கள்.
பிணை தொகை வழங்கியோ கைதிகளை பரிமாறி கொண்டோ அவர்கள் எங்களை மீட்க முயற்சிக்கவில்லை. அதற்கு பதில் மிகவும் சிக்கலான ஆபத்து நிறைந்த செலவு மிக்க அதிரடி தாக்குதல் மூலம் எங்களை விடுவிக்க அவ ர்கள் முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. என்னுடன் சிறையில் இருந்த பிற பிணை கைதிகளுக்கு என்ன நேர்ந்ததோ, அதே கதி எனக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பே மிக அதிகம் என்பதை எப்போதே நான் உணர்ந்து விட்டேன். பிணை தொகை, கைதிகள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சம்மதிக்காததே இதற்கு காரணம் என்று அந்த வீடியோவில் கேன்ட்லீ வாசித்தார்.
இது குறித்து பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், ஜான் கேன்ட்லீ இடம் பெற்ற மேலும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளதை அறிவோம். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தது. சிரியாவில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாதிகளால் ஜான்கேன்ட்லீ கடத்தப்பட்டார். பின்பு அவர் சிரியா கிளர்ச்சி படையினரின் உதவியுடன் ஐ.எஸ்.ஸிடம் இருந்து தப்பினார். எனினும் ஆண்டு இறுதியில் மீண்டும் சிரியாவுக்கு சென்ற அவரை பயங்கரவாதிகள் இரண்டாவது முறையாக கடத்தினர். சிரியாவிலும், ஈராக்கிலும் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடியாக தங்களிடம் பிணை கைதியாக இருந்த ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் ஸாட்லாப், பீட்டர் காஸிக் ஆகிய 3 அமெரிக்கர்களையும், டேவிட் ஹெய்ன்ஸ், ஆலன் ஹென்னிங் ஆகிய 2 பிரிட்டிஷாரையும் கொடூ ரமாக தலையை துண்டித்து படுகொலை செய்து அதன் வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோக்களில் பிணை கைதிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்ததை போலவே ஆரஞ்சு நிற உடையை ஜான் கேன்ட்லீக்கு அணிவித்து அமெரிக்கா, பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொடர் வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து