முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

மும்பை - விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. காயம் காரணமாக முதல் டெஸ்டில் கேப்டன் டோனி பங்கேற்கவில்லை. எனவே அந்த போட்டிக்கு விராட் கோலி தலைமை ஏற்கிறார். இரண்டாவது போட்டியி்ல் டோனி பங்கேற்பார். டோனி ஆஸ்திரேலியா சென்றதும் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா நாடு திரும்பி விடுவார்.
மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்பு இந்திய அணி நேற்று முன்தினம் அதிகாலை ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இன்று 24ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் உள்ளூர் அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளது.
டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு ஜனவரி மாதம் 16ம் தேதியில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் தொடங்கவுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மெல்போர்னில் களமிறங்குவதாக இருந்தது. ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அமைப்பு அதிகாரிகள் அதிகாலையிலேயே இந்திய அணியினரை வரவேற்க விமான நிலையத்தில் திரண்டனர். இந்திய ரசிகர்களும், அங்கு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதிகாரிகள் முன்கூட்டியே விமான நிலையத்தில் காத்திருந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
டோனி(கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவன், முரளி விஜய், லோகேஷ் ராகுல், சத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரித்திமான் சாஹா, நமன் ஓஜா, அஸ்வின், கரண் சர்மா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து