முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவத்துக்கு ரூ.1 5,750 கோடியில் பீரங்கிகள்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்திய ராணுவத்துக்கு ரூ. 15,750 க ோடியில் 814 பீரங்கிகள் வாங்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஒப்புதல் அளித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது,
டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்துக்கு 155 எம்எம், 52 காலிபர் ரகத்தில் 814 பீரங்கிகள் வாங்க வேண்டும் என்பது தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பீரங்கிகளை வாங்குவதற்காக குறைந்தது 6 ஒப்பந்தங்களை கோருவதென்று முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக இந்தியாவை சேர்ந்த எல்அண்ட் டி, டாடா, பாரத் போர்ஜ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய விமானப்படை யில் உள்ல ஆவ்ரோ டிரான்ஸ்போர்ட் விமானங்களுக்கு பதிலாக டாடா சன்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பிலான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 56 விமானங்களை வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது இந்த விமானங்கள் தொடர்பாக கூடுதல் விவரங்கள் கேட்பதென்று தீர்மானிக்கப்பட்டது.
இதே போல் சுவிட்சர்லாந்து நாட்டிடம் இருந்து ரூ. 8200 கோடி மதிப்புக்கு 106 பிலாட்டஸ் அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்திலும் கூடுதல் விவரங்களை கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்துக்கு ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்வதில் கடந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஆயுத தளவாடங்களை விலைக்கு வாங்கி பின்னர் உள்நாட்டிலேயே தயாரிப்பது என்பது அந்த திட்டத்தின் சாராம்சமாகும். அந்த திட்டத்தின்படி ரூ. 15,750 கோடிக்கு 814 பீரங்கிகள் வாங்கப்படுகின்றன. அதில் வெளிநாட்டில் இருந்து 100 பீரங்கிகள் முதலில் வாங்கப்படும். அதன் அடிப்படையில் எஞ்சியுள்ள 714 பீரங்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்திய ராணுவத்துக்கு இத்தாலியிடம் இருந்து போபர்ஸ் பீரங்கிகள் கடைசியாக வாங்கப்பட்டன. அதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக 1986ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பிறகு இந்திய ராணுவத்துக்கு புதிதாக பீரங்கிகள் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து