முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருஞ்சாணி - பேச்சிப்பாறை நிரம்பின: குமரியில் வெள்ள அபாயம்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில் - குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் திருவட்டாரில் அதிகபட்சமாக 22மி.மீ மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.37 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.70 அடியாகவும் உயர்ந்தது. இதனால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகிறது. முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் மறுகால் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது. தென்தாமரைக்குளம் அருகே குமார பெருமாள் விளையில் மணியம்மை ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர் மழைக்கு அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 143 அடியை கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 132. 65 அடியாக உயர்ந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.57 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 95.45 அடியாக அதிகரித்து உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் ஓரிரு நாட்களிலும் மணிமுத்தாறு அணை ஒரு வாரத்திலும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையினால் கடனா, ராமநதி அணைகள் நிரம்பியிருந்தன. பின்னர் பாசனத்துக்கு இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து