முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் - ஜார்கண்ட் சட்டசபைக்கு நாளை முதல் கட்ட தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீர் - ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது.
காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நாளை தொடங்குகிறது. டிசம்பர் 2ம் தேதி 2வது கட்ட தேர்தலும், 9ம் தேதி 3வது கட்ட தேர்தலும், 14ம் தேதி 4வது கட்ட தேர்தலும், 20ம் தேதி 5வது கட்ட தேர்தலும் நடக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 87. இதில் முதல் கட்டமாக நாளை 1 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 18 தொகுதிகளில் 2வது கட்ட தேர்தலும், 1 6 தொகுதிகளில் 3வது கட்ட தேர்தலும், 18 தொகுதிகளில் 4வது கட்ட தேர்தலும் , 20 தொகுதிகளில் 5வது கட்ட தேர்தலும் நடக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 81. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது. 20 தொகுதிகளில் 2வது கட்ட வாக்குப்பதிவும், 17 தொகுதிகளில் 3வது கட்ட வாக்குப்பதிவும், 1 5 தொகுதிகளில் 4வது கட்ட வாக்குப்பதிவும், 16 தொகுதிகளில் 5வது கட்ட வாக்குப்பதிவும் நடக்கிறது. காஷ்மீ ரிலும், ஜார்கண்டிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி முதல்கட்ட பிரச்சாரம் செய்தார். இதே போல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆத ரித்து அதன் தலைவர்கள் சோனியா காந்தி, ராகு ல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
காஷ்மீரில் பா.ஜனதா, காங்கிரஸ் தவிர ஆளும் தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்தனியாக நிற்பதால் 4 முனைப்போட்டி நிலவுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், லல்லு, நிதீஷ்குமார் கட்சிகளின் கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இந்த இரு மாநிலத்திலும் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடி பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். காஷ்மீ ரில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலும் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தி உள்ளது. இதற்காக 5 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. டிசம்பர் மாதம் 23ம் தேதி இரு மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து