முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்பண்ட் மோசடி: நவீன்பட்நாயக் உதவியாளரிடம் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புவனேஸ்வரம் - ஒடிசாவில் சிட்பண்ட் மோசடி தொடர்பாக முதல்வர் நவீன்பட்நாயக் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
மேற்கு வங்காளத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி போல் ஒடிசாவிலும் சிட்பண்ட் மோசடி புயலை கிளப்பி உள்ளது. ஏற்கனவே ஒடிசாவில் இந்த மோசடியில் ஒரு எம்.பியும், ஒரு எம்.எல்.ஏ.வும் கைதாகி இருக்கிறார்கள். ஒடிசாவில் 43 சிட்பண்ட் நிறுவனங்கள் இயங்குகிறது. இவற்றில் மோசடி நடப்பதாக வந்த புகாரை அடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இங்கும் சாரதா சிட்பண்ட் கிளைகள் உள்ளன.
சிட்பண்ட் மோசடியில் கைதான புரோக்கர் ஒருவர் முதல்வர் நவீன்பட்நாயக் உதவியாளரும், தனியாக ஒரு சிட்பண்ட் நடத்துவதாக வாக்குமூலம் அளித்து இருந்தார். இதையடுத்து முதல்வர் நவீன்பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான சரோஜ்சாகுவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. பல்வேறு கேள்விகள் கேட்டு 90 நிமிடங்கள் வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தனக்கும் சிட்பண்ட் மோசடிக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவுபட விளக்கியதாக பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சரோஜ்சாகு முதல்வர் நவீன்பட்நாயக் வீட்டில் உதவியாளராக இருந்து பல்வேறு வேலைகளை கவனித்து வந்தார். சிட்பண்ட் மோசடி தொடர்பாக ஆளும் கட்சியினர் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் எம்பியும், எம்எல்ஏவும் வேறு காரணங்களுனக்காக கைது செய்யப்பட்டனர் என்றும் முதல்வர் நவீன்பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து