முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிய குறைப்பு நடவடிக்கைகள் ஏன்? ஜெட்லி விளக்கம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மானிய குறைப்பு நடவடிக்கைகள் எடுப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார் மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் மன உறுதிதான் அவரது உண்மையான பலம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவரான அருண் ஜெட்லி, நரேந்திர மோடியை உயரிய நிலைக்கு இட்டுச் சென்ற அம்சங்கள் குறித்து கூறும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "கடந்த 15 ஆண்டுகளாக மோடியை நான் அருகில் இருந்து கவனித்து வருகிறேன். அவர் கடின உழைப்பாளி. அதனால்தான் அவர் முதல்வர் பதவியில் இருந்து பிரதமர் பதவிக்கு வளர்ந்து தற்போது சர்வதேசத் தலைவர்களில் முக்கியமானவராக மாறியிருக்கிறார். மோடியின் மன உறுதிதான் அவரது உண்மையான பலம். அவர் தீவிரமான சுய ஒழுக்கமும், வலுவான தன்னம்பிக்கையும் நிரம்பியவர். இவைதான் அவரை தன்னிகரற்ற தலைவராக உயர்த்தியிருக்கிறது" என்றார் அருண் ஜேட்லி.
மத்திய அரசின் 2015 பட்ஜெட் குறித்து அவர் கூறும்போது, "அடுத்த பட்ஜெட்டில் 2-ம் தலைமுறை சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படும். ஆண்டின் 365 நாட்களும் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஆனால், அவற்றை எடுத்துக்காட்ட பட்ஜெட்தான் சிறந்த தருணம். அவற்றை நடைமுறைப்படுத்தும்போது, அடுத்த நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதமாக‌ இருக்கும்.
நாட்டில் ஏழைகள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்குத்தான் மானியம். ஆனால், ஏழைகள் அல்லாத பணக்கார மக்களும் அரசின் மானியங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உண்மையான ஏழைகளுக்கு உதவ முடியாமல் போகிறது. ஆகவேதான் மானியக் குறைப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது, என்றார் அருண் ஜெட்லி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து