முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1727 உ.மருத்துவ பணியிடங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - 1727 சிறப்புப் பிரிவு உதவி மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணலுக்கு வரும் டிசம்பர் 1 ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடுமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:..2012-ஆம் ஆண்டில், நாட்டிலேயே முதன் முறையாக, மருத்துவப் பணியாளர்களை தேர்வுசெய்ய, முதன் முறையாகமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில்உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தால் மக்கள் நல்வாழ்வுமற்றும் குடும்ப நலத்துறையில்இதுவரை 4461 மருத்துவர் மற்றும் இதர பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, 2013-14-ஆம் ஆண்டில் 2726 உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2014-15 ஆம் ஆண்டில்ஏற்பட்டுள்ள 2176உதவி மருத்துவ அலுவலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் 12.10.2014அன்று தேர்வு நடத்தி மருத்துவர்களை நிரப்ப நடவடிக்கைஎடுத்து வருகிறது.
அரசு மருத்துவ நிலையங்களில், 36 சிறப்புப் பிரிவுகளில் காலியாகவுள்ள 1727 உதவிமருத்துவர் பணியிடங்களைவிரைவாகநிரப்ப ஏதுவாக `வாக்-இன்’ தேர்வு முறை என்ற எளிய முறையில்சிறப்புப் பிரிவு பணியிடங்களை நிரப்பஅரசு முடிவு செய்து அதன் தொடர்ச்சியாக, மருத்துவபணியாளர் தேர்வு வாரியம் 1727 சிறப்புப் பிரிவு உதவிமருத்துவர்களை நியமிக்க 9.11.2014 அன்றுவிரிவான அறிவிப்பினையை www.mrb.tn.gov.inஇணையதளத்தில்வெளியிட்டுள்ளது.இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர், 1.12.2014 வரை மருத்துவப்பணியாளர்தேர்வு வாரிய இணையதளத்தில்) ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்தவிண்ணப்பதாரர்களைக் கொண்டு,நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதி முறைகளுக்குட்பட்டு `வாக் இன்’ தேர்வுமுறையின் மூலம் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளமருத்துவர்கள் அனைவரும் 1.12.2014-க்குள்விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து