முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் - ஜார்க்கண்டில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.
காஷ்மீரில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. இன்று தொடங்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20-ம் தேதி 5-வது கட்டத்துடன் நிறைவு பெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக கூட்டணி யாக ஆண்ட, தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் தனித்துக் களமிறங்குகின்றன. ஒன்றை யொன்று பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன இக்கட்சிகள். மக்களவைத் தேர்தல், ஹரியாணா, மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல்களில் வென்ற களிப்புடன் களமிறங்கும் பாஜக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக பிரதான கட்சியாக, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு கடும் சவால் அளிக்கிறது.
காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றுவது அல்லது தங்களின் ஆதரவின்றி வேறு யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நம்பிக்கையில் பாஜக தலைவர்கள் உள்ளனர். 1990களிலிருந்தே, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி களில் வாக்குப் பதிவைப் புறக் கணிக்க பிரிவினைவாதத் தலை வர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, குப்வாரா, பாராமுல்லா மாவட்டங்களில் ராணுவத்தினர் நடத்திய சோதனை யில், பயங்கரவாதிகளின் பதுங் கிடங்களில் இருந்து, 18 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆயுதங்கள் பிடிபட் டுள்ளதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, மத்திய பாதுகாப்புப் படையினர், மாநில காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 12 தொகுதிகளில் வென்றிருப் பதால், அக்கட்சி கூடுதல் பலத் துடன் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் என பல கட்சிகள் களமிறங்கியுள்ள போதும், ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜகவுக்கும், ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்குமான இரு முனைப் போட்டியாகவே இத்தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து