முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உட்பட 3 நகரங்களில் குழந்தைகள் உதவி மையங்கள்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக 1996ம் ஆண்டு ‘சைல்ட்லைன்' மையம் தொடங் கப்பட்டது. அதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. தற்சமயம் நாட்டின் 282 இடங்களில் 543 தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தனது சேவையை அளித்து வருகிறது.
இந்நிலையில் இதன் சேவையை மேலும் விரிவுபடுத்து வதற்கு கொல்கத்தா, குர்கான் மற்றும் சென்னை ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் புதிய ‘சைல்ட்லைன்' மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறும்போது, "இந்த மூன்று புதிய மையங்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 500 நகரங்களில் குழந்தைகளுக்கு உதவ முடியும். நாட்டின் இதர பகுதிகளில் உள்ள இடங்களுக்கெல்லாம் இந்த மூன்று மையங்களே தகவல் மையங்களாகவும் செயல்படும். இதன் மூலம் ஒரு குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட்டால் விரைந்து செயலாற்ற முடியும்" என்றார்.
தற்போது ‘சைல்ட்லைன்' மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அதனால் மேற்கு மற்றும் வட இந்தியாவில் இருந்து வரும் அழைப்புகளை மிக விரைவாகக் கவனிக்க முடிகிறது. ஆனால் இந்தப் புதிய மையங்கள் மூலம் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் சேவையாற்ற முடியும்.
‘சைல்ட்லைன்' அமைப்பின் 1098 என்ற எண்ணுக்கு இப்போது வரை 38,22,081 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் சுமார் 4 சதவீதம் அழைப்புகள் காணாமல் போன குழந்தைகள் பற்றியதாக இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து