முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பாதிரியார் - கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் வழங்கினார்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

வாட்டிகன் - கேரளத்தைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் இலியாஸ் சவரா, கன்னியாஸ்திரி யூஃப்ரேசியா ஆகியோருக்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்கினார்.
வாட்டிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடை பெற்றது. அப்போது, கேரளத்தைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் இலியாஸ் சவரா, கன்னியாஸ்திரி யூஃப்ரேசியா, இத்தாலியைச் சேர்ந்த கியோவானி அன்டோனியா பரினா, லுடோவிகோ டா கசோரியா, நிகோலா டா லாங் கோபர்டி, அமடோ ரோன்கானி ஆகி யோருக்கு புனிதர் பட்டத்தை அளிப் பதாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கத்தோலிக்க திருச்சபைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர். குரியகோஸும், யூஃப்ரேசி யாவும் கேரளத்தின் நூற்றாண்டு பழமைமிக்க சிரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந் தவர்களாவர். கடந்த 2008-ம் ஆண்டு, இதே திருச்சபையைச் சேர்ந்த அல்போன்ஸா என்பவரும் புனிதர் பட்டம் பெற்றுள்ளார்.
குரியகோஸும், யூஃப்ரேசி யாவும் புனிதர் பட்டம் பெறுவதை யொட்டி நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம், எர்னாகுளம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. குரியகோஸ், ஆலப்புழை மாவட் டத்தில் 1805-ம் ஆண்டு பிறந்தார். சிரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து பணியாற்றிய அவர், மதச்சார்பற்ற கல்வி, குழந்தைகள் நலன் உள் ளிட்ட பல்வேறு துறைகளில் சேவை செய்தார். 1871-ம் ஆண்டு அவர் காலமானார்.
திருச்சூர் மாவட்டத்தில் 1877ம் ஆண்டு பிறந்த யூஃப்ரேசியா, தனது பிரார்த்தனைகள் மூலமும், அறிவுரையின் மூலமும் மக்களுக்கு முக்கிய பிரச்சினைகளில் வழி காட்டினார். அவர் 1952-ம் ஆண்டு காலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து