முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்சினை இல்லை

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கேரள மக்கள் பாதுகாப்பு முக்கியம்.
117 ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணையின் உறுதி தன்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 5, 6 மாவட்டங்களின் நீர் தேவையை நான் புரிந்து கொள்கிறேன். அது போல அணையின் உறுதி தன்மை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
142 அடிக்கு நீரை தேக்கி வைப்பதால் வன உயிரினங்கள் பாதுகாக்கப்படும்.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால் தமிழக அரசுடன் சுமூக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.
மத்திய அரசிடம் எங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறோம். கனிம வள கொள்ளை குறித்து மத்திய அரசிடம் ஆவணங்களை வழங்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து