முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு கடிதம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் உள்பட 38 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் 78 படகுகளையும் தமிழக மீனவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா ஏற்கனவே அறிவுறுத்தியபடி மீனவர்கள் நலன்களுக்காக மத்திய அரசு ரூ. 1,520 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கடல் ஆழத்தை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.10 கோடி தொடர் மான்யம் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்‍கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்,நேற்று முன் தீனம்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்‍கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களிலிருந்து 3 படகுகளில் மீன்பிடிக்‍கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றொரு சம்பவம் குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு வர இக்‍கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட மீனவர்கள், அவர்களது படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்‍கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்‍கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்‍கு புனையப்பட்டு இலங்கை அரசால் தூக்‍கு தண்டனை விதிக்‍கப்பட்ட 5 மீனவர்கள், கடந்த 20-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட ஆக்‍கப்பூர்வமான நிகழ்வைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.
- இந்த 5 மீனவர்களும் கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டது முதல், அவர்களை விடுவிக்‍க வேண்டும் என வலியுறுத்தி, எங்களின் தலைவி புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்‍கிணங்க, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை பிரதமர் அறிவார் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், எங்கள் தலைவியின் அறிவுரைக்‍கிணங்க தமிழக அரசு, 5 மீனவர்களின் தரப்பில் வாதாட வழக்‍குச் செலவு அனைத்தையும் ஏற்றுக்‍கொண்டதுடன், மீனவர்கள் சிறைபிடிக்‍கப்பட்டதிலிருந்து அவர்களின் குடும்பங்களுக்‍கு நிதியுதவி வழங்கி ஆதரவு அளித்தது என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
5 மீனவர்களுக்‍கும் தூக்‍குத் தண்டனை விதிக்‍கப்பட்டதாக கடந்த மாதம் 30-ம் தேதி தகவல் கிடைத்தவுடன், இந்த அப்பாவி மீனவர்களை காப்பாற்றி, அவர்களை கூடிய விரைவில் தாயகம் திருப்பி அனுப்ப மத்திய அரசு இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்‍கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு, பிரதமரை வலியுறுத்தியதையும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், 5 மீனவர்களுக்‍கு விதிக்‍கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும், அவர்களுக்‍காக சிறந்த வழக்‍கறிஞரை வைத்து வாதாடவும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடுமாறும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது – 5 மீனவர்களின் தரப்பில் வாதாட வழக்‍குச் செலவுக்‍காக 20 லட்சம் ரூபாயையும் தமிழக அரசு அனுமதித்தது. – தமிழக அரசின் கோரிக்‍கையை அடுத்து பிரதமர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு நடவடிக்‍கை மேற்கொண்டதன் பேரில், இந்த 5 மீனவர்களும் கடந்த 20-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர் – பிரதமர் உரிய நேரத்தில் தலையிட்டு நடவடிக்‍கை மேற்கொண்டதற்காக தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நேற்றைய தினம் நடந்துள்ள சம்பவம், தமிழக மீனவர்கள் பாக். ஜலசந்தியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்‍கும்போது அவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது போன்ற வழக்‍கமான நடவடிக்‍கைகளில் இலங்கை அதிகாரிகள் மீண்டும் ஈடுபட்டுள்ளதையே எடுத்துக் காட்டுகிறது.
நேற்று கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 24 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் 2 மாதங்களுக்‍கு முன்பு கைது செய்யப்பட்டு அந்நாட்டில் காவலில் உள்ளனர் என்பதையும் பிரதமருக்‍கு நினைவுபடுத்த விரும்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைதியான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்களை அடுத்தடுத்து கைது செய்து, துன்புறுத்திய சம்பவங்கள் மற்றும் மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்‍காமல் வைத்துள்ள இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தவறான அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்‍கைகளை ஏற்கெனவே, எங்களது மதிப்புமிக்‍க தலைவர் புரட்சித் தலைவி அம்மா, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
- இதன் காரணமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும், அவர்களின் குடும்பத்தினரும் தற்போது மிகமோசமாக பாதிப்படைந்துள்ளனர் – நேற்று சிறைபிடிக்‍கப்பட்டுள்ள 3 படகுகள் மட்டுமல்லாமல், தமிழக மீனவர்களின் 75 படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்துவருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை வாழ்வாதாரத்தை
இழந்து தவிப்பு
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்‍காமல் இருக்‍கும் இலங்கை அரசின் செயல்பாடு, தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – அடிப்படை வாழ்வாதாரத்தை மீனவர்கள் இழந்திருப்பதுடன், மிகுந்த மனத் தளர்வுக்‍கும் ஆளாகியுள்ளனர். – இந்த பிரச்சினையை இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் கொண்டு சென்று, வடகிழக்‍கு பருவமழையால் மிக மோசமாக பாதிப்புக்‍குள்ளாகி, அந்நாட்டில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்திவைக்‍கப்பட்டுள்ள படகுகளை உடனடியாக மீட்டுத்தர பிரதமர் நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஏறக்‍குறைய 10 லட்சம் மீனவ குடும்பத்தினர் கடல் மீன்பிடி தொழில் ஒன்றையே தங்களின் வருவாய்க்‍கான வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். - தமிழக அரசு, கடலோர சுற்றுச்சூழல் நெருக்‍கடிகளைக் குறைத்து, மீனவர்களின் வாழ்க்‍கைத் தொழிலை விரிவுப்படுத்துவதற்கு தேவையான எண்ணற்ற நடவடிக்‍கைகளை எடுத்திருப்பதை, எங்களது தலைவி புரட்சித்தலைவி அம்மா ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளார்.
- மீனவர்களின் தொடர்கதையாகி வரும் இப்பிரச்சினைக்‍கு தீர்வு காண்பதற்கு தற்போதைய சூழ்நிலையில் இரண்டு விதமான அணுகுமுறைகள் அவசியம். – மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை நீண்டகால அடிப்படையில் மேம்படுத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசிடமிருந்து எங்கள் தலைவர் ஏற்கனவே கோரியுள்ளபடி, ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிதியுதவிக்‍கு அனுமதி மற்றும் கடல் ஆழத்தை பராமரிப்பதற்கு ஆண்டு ஒன்றுக்‍கு 10 கோடி ரூபாய் தொடர் மானியம் அளிப்பது, முதல் அணுகுமுறை – தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய – வரலாற்று ரீதியான பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்‍க ஏதுவாக கச்சத்தீவை மீட்பதுடன், கச்சத்தீவு குறித்து கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வது இரண்டாவது அணுகுமுறையாகும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை இலங்கைக்‍கு தாரை வார்த்து கொடுத்ததை எதிர்த்தும், சட்ட ரீதியாக அதனை திரும்ப பெறுவதற்கும் எங்களது தலைவி புரட்சித்தலைவி அம்மா, தனிப்பட்ட முறையிலும், தமிழக அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாக்.ஜலசந்தியில்
மீன்பிடி உரிமை மறுப்பு
- தமிழக மீனவர்களின் பாரம்பரிய கடல் பகுதியான பாக். ஜலசந்திப் பகுதியில் அமைதியான முறையில் மீன் பிடிக்‍கும் உரிமைகள் மறுக்‍கப்படுவது, தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. – நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கச்சத்தீவை மீட்கும் பிரச்சினையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, உடனடியாக தீர்வுகாண வேண்டும். – இதன்மூலம், தமிழக மீனவர்களுக்‍கு பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்‍கும் உரிமை மீண்டும் கிடைக்‍க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை எங்கள் தலைவி புரட்சித்தலைவி அம்மா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினையை உடனடியாக எடுத்துக்‍கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்துவதுடன், இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும், இவர்கள் உட்பட அந்நாட்டு சிறையில் ஏற்கெனவே வாடிவரும் 38 மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதை உறுதிசெய்ய வேண்டும் – மேலும், இலங்கை அரசு பிடித்துவைத்துள்ள 78 படகுகளையும் விடுவிக்‍க பிரதமர் உடனடியாக நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என்றும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து