முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்ப்யூட்டர்கள் வாங்கியதில் முறைகேடு: விசாரணைக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி மாநிலத்தில் உள்ள கீழ்கோர்ட்டு நீதிபதிகள் தங்களது கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் ஐ பேடுகளை ஆண்டுக்கு ஆண்டு மேம்படுத்திக் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நீதிபதிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக நவீன கம்ப்யூட்டர்கள் அவசியம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நீதிபதியும் தாங்களாகவே இந்த உபகரணங்கள் வாங்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கம்ப்யூட்டர் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பணம் முறைகேடாக வேறு பொருட்கள் வாங்க பயன் படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய திடீர் சோதனைகளில் இந்த முறைகேடுகள் பற்றி தெரிய வந்தது. பெரும்பாலான நீதிபதிகள் கம்ப்யூட்டர் வாங்க கொடுக்கப்பட்ட பணத்தில் விலை உயர்ந்த நவீன டி.வி. வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சில நீதிபதிகள் லேப்டாப், ஐபேடு வாங்கியதாக கூறி விட்டு, தங்கள் வீடுகளில் ஹோம் தியேட்டர் அமைத்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த முறைகேடுகள் பற்றி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் ஆதாரங்களுடன் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்த டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக நீதிபதிகள் விபின்சிங்வி, ராஜீவ்சக்தர், வி.கே.ராவ் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூவர் விசாரணைக் குழு, குற்றம் சாட்டப்பட்டுள்ள 300 நீதிபதிகளுக்கும், கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கியதற்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து