முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் ரயில் பெட்டிகளில் குப்பைத் தொட்டி அமைக்க முடிவு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - பிரதமர் நரேந்திர மோடி பொது இடங்களை மக்கள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிளீன் இந்தியா எனும் திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பிரபலங்கள் உதவியுடன் சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இதற்கிடையே மோடியின் சுத்தப்படுத்தும் திட்டத்தை பயணிகள் ரயில் பெட்டிகளிலும் நடைமுறைப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் பெட்டிகளில் ஏசி வகுப்பில் மட்டுமே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மற்ற சாதாரண பெட்டிகளில் பயணங்கள் கழிக்கும் குப்பைகளை போட குப்பை தொட்டி வசதி இல்லை. கழிவறை அருகே உள்ள குப்பை போடும் வசதியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 2 குப்பை தொட்டிகள் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் குப்பை தொட்டி வைக்கப்பட்டால் பயணிகள் குப்பைகளை வெளியில் வீசியெறிவது தவிர்க்கப்படும். அதோடு பெட்டிகளும் சுத்தமாக இருக்கும். இந்தியாவில் சுமார் 7500 ர யில் நிலையங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 700 ரயில் நிலையங்களை 24 மணி நேரமும் பளிச்சென சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 700 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமையில் அடுத்த மாதம் முதல் ரயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து