முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்கல் கமிட்டி அறிக்கை: டெண்டுல்கர் மவுனம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - ஐ.பி.எல். ஸ்பார்ட் பிக்சிங் சூதாட்டம் குறித்து முத்கல் கமிட்டி தனது விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த அறிக்கை குறித்து நேற்று விசாரணை நடைபெற்றது.
பாராளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், நியமன எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கரிடம் ஸ்பார்ட் பிக்சிங் சூதாட்ட வழக்கு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர்.
முத்கல் கமிட்டி அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். இது குறித்து தெண்டுல்கர் கூறும் போது ‘‘சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதனால் முத்கல் கமிட்டி அறிக்கை குறித்து நான் இப்போது கருத்து தெரிவிப்பது சரியானதல்ல’’ என்றார்.
முத்கல் கமிட்டி அறிக்கையில் 13 பேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என் சீனிவாசன், குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா, சுந்தர்ராமன் ஆகிய 4 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டன.
இதில் என்.சீனிவாசனுக்கு ஸ்பார்ட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு வீரர் மீது அவர் நடவடிக்கை எடுக்க தவறி விட்டார் என்று கூறப்பட்டு உள்ளது.
சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்றும், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ராவுக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருந்தது என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ராமனுக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து