முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மைக்கேல் கிளார்க்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4–ந்தேதி அடிலெய்ட்டில் தொடங்குகிறது.
இந்த டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் அடைந்த கேப்டன் மைக்கேல் கிளார்க் அணியில் இடம் பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 14–ந்தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவர் காயம் அடைந்தார். இதனால் எஞ்சிய போட்டிகளில் விளையாடவில்லை.
தற்போது இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் உடல் தகுதியை பொறுத்தே அவர் ஆடுவார். இன்னும் 2 தினங்களுக்குள் கிளார்க் தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். உடல் தகுதி பெறாவிட்டால் அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடமாட்டார்.
துணை கேப்டனாக இருக்கும் ஹாடின் கேப்டனாக பணியாற்றுவார். உடல் தகுதி பெற்றாலும் கிளார்க் இந்தியாவுக்கு எதிரான 2–வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி நிரூபிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். ரியான் ஹாரிஸஸ், ஹாசில்வுட் ஆகியோர் அணியில் இடம் பெற்று உள்ளார்.
மைக்கேல் கிளார்க் (கேப்டன்), பிரட் ஹாடின் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), வார்னர், ரோஜர்ஸ், வாட்சன், ஸ்டீவ் சுமித், மிச்சேல் மார்ஷ், மிச்சேல் ஜான்சன், ரியான் ஹாரிஸ், பீட்டர் சிடில், நாதன் லயன் ஹாசில்வுட், ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து