முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

430 கோடி ஆண்டுகள் பழசு

430 கோடி ஆண்டுகள் பழமையான பாக்டீரியா படிமங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு கியூபெக் பகுதியில் அமைந்துள்ள ஹட்சன் கடற்கரையோரம் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. பூமி தோன்றிய சிறிது காலத்திலேயே இந்த பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம் என இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

இயற்கை வழி

முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

நம்மீது பிரியம்

 விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. இதனால்தான், அவைகள் நம்மை கடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என்றும்,ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

காரீயத்தால் மூடப்பட்ட ஆவணங்கள்

மேரி கியூரியை அனைவருக்கும் தெரியும். அவர்தான் கதிர்வீச்சு மிக்க ரேடியம் என்ற தனிமத்தை கண்டு பிடித்தார். அவர் இறந்த பின் அவரது உடல் என்ன ஆனது தெரியுமா.. வாருங்கள் பார்க்கலாம்... நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியும் பியரி கியூரியும் தனித்தனியே ஆராய்ச்சியை தொடர்ந்தனர். கதிரியக்க தனிமத் தேடலைத் தொடர்ந்த மேரி, அடுத்தடுத்து யுரேனியம், பொலோனியம் ஆகியவற்றைவிட அதிக கதிர்வீசும் மற்றொரு தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ’ரேடியம்’ எனப் பெயரிட்டார். மேரி கியூரியின் கதிரியக்க ஆராய்ச்சிக்காக 1903-ல் பியரி கியூரி, ஹென்றி பெக்குரல் ஆகியோருடன் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி. மேரி கி யூரி மறைந்து போய் 150 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனா ல் அவர் பயன்படுத்திய பொருட்களி ன் மேல்பாதிக்கப்பட்டுள்ள  ரேடியம் தனிம கதி ர்வீச்சின் தாக்கம் இன்னும் அவற்றில் உள்ளன. இது குறைய இன்னும 1500 ஆண்டுகள் ஆகும். அதுதான் கதி ர்வீச்சு தனிமத்தின் குணாம்சம் . அதன் அரை ஆயுள் காலம் 1500 ஆண்டுகள் ஆகும். எனவே மேரி கி யூரி மற்றும் பியரி கியூரி பயன்படுத்திய நோ ட்டுகள், பேப்பர்கள், அவர்களின் எழுதுகோல்கள், போன்றவற்றை ஒரு பெ ட்டியி ல் போட்டு அதனை ஒரு அகுல கனமுள்ள காரிய தகடு கொ ண்டு மூடி பத்திரமாக வை த்துள்ளனர். அதுபோல மேரிகியூரி மற்றும் பியரி கியூரி இருவரின் உடல்களிலும் கூட ரேடியம் தனிமத்தின் கதிர்வீச்சு இருக்கும், எனவே அவர்களின் கல்லறையும் கூட ஒரு அங்குல கனமுள்ள காரீய தகடால் மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

சொடக்கு எடுக்கும்போது விரல்களிலிருந்து சத்தம் ஏன் வருகிறது தெரியுமா?

கை, கால் விரல்களிலிருந்து சொடக்கு எடுக்கும்போது சத்தம் ஏன் கேட்கிறது என்று தெரியுமா? நாம் கை கால்கள் களைப்பாக இருக்கும்போது விரல்களை வளைத்து, இழுத்து சொடக்கு எடுப்பது வழக்கம். கை விரல்களை போலவே, கால் விரல்களிலும் நாம் அவ்வாறு செய்வதுண்டு. சிலருக்கு அவ்வாறு சொடக்கு எடுத்து முடித்ததும் ஒரு ஆசுவாசம் வந்ததுபோல உணர்வார்கள். ஆனால், இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என தெரியுமா.. நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல விரல்களில் உள்ள எலும்புகளிலோ, அல்லது தசை நார் இறுக்கம் தளர்வதாலோ வருவதில்லை. மாறாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் நைட்ரஜன் வாயு குமிழ்கள் (Nitrogen Gas Bubbles) நாம் அழுத்தும்போது வெடிப்பதனால் சொடக்கு எடுப்பது போல சத்தம் நமக்கு கேட்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago