Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

இனப்பெருக்க காலத்தின் போது நிறம் மாறும் பறவை எது தெரியுமா?

ஒரு வகை தேனிசிட்டு பறவையில் ஆண் பறவைதான் இவ்வாறு நிறம் மாறுகிறது. இது sunbird எனப்படும் தேன்சிட்டு குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். மலர்களில் தனது நீண்ட அலகை வைத்து தேன் உறிஞ்சி குடிப்பதே இதன் பிரதான பணியாகும். இந்த பறவையினத்தில், ஆண் பறவை நன்கு வளர்ந்து, இனப்பெருக்க காலத்தை எட்டும்போது, அதன் நிறம், தோற்றம் மற்றும் இறகுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். இனப்பெருக்க காலம் முடிந்த பிறகு, ஆண் பறவையின் கவர்ச்சி மறைந்து, பார்ப்பதற்கு ஒரு பெண் பறவை போல மாறிவிடும். அதாவது, சாதாரண நாட்களில் ஆண், பெண் பறவைகளின் தோற்றத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மற்றபடி, அதன் உடல் உறுப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை தவறாக புரிந்துகொண்டு, ஆண் பறவை பெண் பறவையாக மாறுகிறது என கூறுவதும் உண்டு.

தேவை முன்னெச்சரிக்கை

இளம் வயதில் தொண்டைப் புண்ணோ, கை, கால் மூட்டுக்களில் வீக்கமோ, ருமாட்டிக் காய்ச்சலோ வந்தால், அவை இதயத்தைப் பாதிக்கலாம். வருடம் ஒரு முறை ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இசிஜியும் செய்து பார்க்கலாம். குடும்பத்தில் இளவயது மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் இருப்பின், மற்ற நபர்கள், 25 வயதிலிருந்தே, இந்த வருடாந்திர சோதனைகளை ஆரம்பிக்கலாம்.

அருகில் இருக்கு

இன்றைய சூழலில், பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களை கண்டறிய, இணையத்தின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள், தனது ஹோம் பேஜில், சர்ச் பார் எனும் தேடுதலுக்கான வார்த்தைகளை உள்ளீடு செய்யும் இடத்துக்குக் கீழ் கொண்டு வரப்ப ட்டுள்ள ஃபைன்ட் ஆன் ஏ.டி.எம் நியர் யு (Find an ATM near you) வசதி மூலம் அருகிலுள்ள ஏ.டி.எம் மையங்களை தெரிந்து கொள்ளலாம்.  கூகுள் மேப் உதவியுடன் அளிக்கப்படும் இந்த வசதி மூலம் அருகிலுள்ள வங்கிக் கிளைகளை உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் ஏற்கனவே இருந்தாலும், முக்கியத்துவம் கருதி கூகுள் ஹோம் பேஜுல் கொண்டுவரப்பட்டுள்ளது.

மரங்களின் எண்ணிக்கை பாதியாக குறைவு

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.மேலும் மனிதர்கள், மரங்கள் விகிதமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 1,92,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் மனித நாகரீகம் தொடங்கிய போது இருந்த மரங்களின் எண்ணிககையை விட தற்போது பாதியாக குறைந்துள்ளது. இது தொடர்பாக  Nature என்ற ஆய்விதழிலும் கட்டுரை வெளியாகியுள்ளது. காடு அழிப்பு வேகம் கடந்த நூறு ஆண்டுகளில் மிக அதிகம். தற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்கிறது ஆய்வு.

புது முயற்சி

பாகிஸ்தானில், லாகூரை சேர்ந்த அகமது அலி என்ற சிறுவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்துள்ளான். பள்ளியில் படிக்கும் அவன் அதை வீடியோ எடுத்து சமூகவலை தளங் களில் வெளியிட்டான். மேலும், கின்னஸ் உலக சாதனைக்காக அந்த வீடியோவை தற்போது அனுப்பி வைத்து இருக்கிறான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago