முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தாகம் தீர்க்க

கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். வருடம் முழுவதும் கிடைக்கும் ஓர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

நீரில் இயங்கும் கணிணியை உருவாக்கிய ரஷ்யா

டிரான்சிஸ்டர்கள் எனப்படும் சிறிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரையிலும் கணிணியானது இயங்குவதற்கு பற்சக்கரங்கள், பிவோட்கள், நெம்புகோல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இவற்றை இயக்குவற்கு என தனியாக ஆற்றலும் தேவைப்பட்டது. இந்த சூழலில் 1936 இல் விளாடிமிர் லுகியானோவ் என்பவர் நீரை பயன்படுத்தி சில கணித முறைகளுக்கு தீர்வு காணக் கூடிய கணினியை உருவாக்கினார். இவற்றை கட்டிடங்களில் ஏற்படும் விரிசலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இது வழக்கொழிந்தது. தற்போது இந்த நீர் கணினி மாஸ்கோவில் உள்ள பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேவைக்கு பயன்படுத்த

ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது. சன் ஸ்க்ரீன் வெயிலில் தேங்காய் எண்ணெயால் போதிய பாதுகாப்பை வழங்க முடியாது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் SPF 8 தான் உள்ளது.ஆனால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க குறைந்தது SPF 30 இருக்க வேண்டும். காயங்களில் இதை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை சந்திக்கக்கூடும். உணவுகளை டீப் ப்ரை செய்வதற்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயே சிறந்தது

வாட்ஸ் அப்பிலும்...

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜிகளான பட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில்  என பல புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கொடுத்த நிலத்தை மறுத்த நாடக மேதை யார் தெரியுமா?

தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் என போற்றப்பட்டவர் பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார். நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஆச்சாரப்பன் தெருவில்தான். ஆனால் தன் பெயருக்கு முன்னால், தன் முன்னோரின் ஊரான ‘பம்மல்’ என்பதை போட்டுக்கொண்டார். அந்த ஊர் மக்கள், அவரால் தங்கள் ஊருக்கு பெருமை கிடைத்ததற்காக தங்கள் அன்பின் அடையாளமாக சில ஏக்கர் நிலத்துக்கான உரிமையை அவருக்கு வழங்கினர். ஆனால் அவரோ ‘‘உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.எனக்கு எதற்கு நிலம்?’’ என்று கூறி மறுத்துவிட்டார்.

அளவாக பயன்படுத்த

அமெரிக்காவின் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கவனக் குறைபாடு, சுறுசுறுப்பாக இயங்க முடியாதது, நடத்தை முறைகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தினமும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுமார் 151 இளம் வயதினரிடம் இச்சோதனை நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago