முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 600 கிராம்.
  2. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
  3. சீரக தூள் - 1/2 ஸ்பூன்.
  4. சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
  5. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  6. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  7. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  8. கோதுமை மாவு - 100 கிராம்.
  9. அரிசி மாவு - 50 கிராம்.
  10. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  11. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. 600 கிராம் உருளைக்கிழங்கை எடுத்து நீளமாக நறுக்கி தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  2. நீளமாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும்.
  4. இதனுடன்   தேவையான அளவு உப்பு,கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்,சீரக தூள் 1/2 ஸ்பூன்,சமையல் சோடா ஒரு சிட்டிகை,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் 1/2 ஸ்பூன்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,கோதுமை மாவு 100 கிராம் மற்றும் 50 கிராம் அரிசி மாவை  போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி  நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை சிறிதளவு எடுத்து கடாயில் போட்டு பொரிக்கவும்.
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான உருளைக்கிழங்கு ப்ரை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago