முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காரைக்குடி மசாலா சீயம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

காரைக்குடி மசாலா சீயம் செய்யத் தேவையான பொருட்கள். 

  1. உளுந்தம் பருப்பு - 400 கிராம்.
  2. பச்சரிசி அரிசி - 400 கிராம்.
  3. கடுகு,உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்.
  4. இஞ்சி - ஒரு துண்டு.
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
  6. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 20.
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கிலோ.
  8. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  9. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில்  400 கிராம் உளுந்தம் பருப்பு மற்றும் 400 கிராம் பச்சரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஊற வைத்த உளுந்தம் பருப்பு மற்றும் பச்சரிசியை ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் 2 ஸ்பூன் கடுகு,உளுந்தம் பருப்பு,பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 20 கறிவேப்பிலை மற்றும் பொடியாக  நறுக்கிய 1/4 கிலோ வெங்காயத்தை போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.
  5. சிறிது நேரம் ஆற வைத்து பின்னர் அரைத்து வைத்துள்ள மாவில் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக எடுத்து போட்டு பொரிக்கவும்.
  8. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான காரைக்குடி மசாலா சீயம் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago