முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பன்னீர் மசாலா

Cooking time in minutes: 
20
Ingredients: 

பன்னீர் மசாலா செய்யத் தேவையான பொருட்கள்.

 

  1. பன்னீர் - 300 கிராம்.
  2. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி - 3.
  4. எண்ணெய் - 4 ஸ்பூன்.
  5. பட்டர் - 50 கிராம்.
  6. பட்டை - 2.
  7. ஏலக்காய் -2.
  8. மிளகு - 10.
  9. சீரகம் - ஒரு ஸ்பூன்.
  10. நீளமாக நறுக்கிய சிகப்பு குடைமிளகாய் - 1/2.
  11. நீளமாக நறுக்கிய பச்சை குடைமிளகாய் -1/2.
  12. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  13. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  14. சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
  15. சோம்புத்தூள் - ஒரு ஸ்பூன்.
  16. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  17. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  18. மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்.
  19. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்.
  20. தயிர் - ஒரு கப்.
  21. கஸ்தூரி மேத்தி - சிறிதளவு.
  22. உப்பு - தேவையான அளவு. 
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 300 கிராம் நறுக்கி பன்னீரை எடுத்து கொள்ளவும்,இதனுடன்  ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் பொடியாக நறுக்கிய 3 தக்காளியை போட்டு நன்றாக  அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் மிளகாய் தூள் போட்டு கலந்து வைத்துள்ள பண்ணீரை போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு  எண்ணெய் ஊற்றவும்,இதனுடன் 50 கிராம் பட்டர் போடவும்,பட்டர் உருகியதும், 2 பட்டை,2 ஏலக்காய்,10 மிளகு,சீரகம் ஒரு ஸ்பூன்,நீளமாக நறுக்கிய 1/2 சிகப்பு குடைமிளகாய்,நீளமாக நறுக்கிய 1/2 பச்சை குடைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு  பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,சீரகத்தூள் 1/2 ஸ்பூன்,சோம்புத்தூள் 1/2 ஸ்பூன்,மிளகு தூள் 1/2 ஸ்பூன்,கரம் மசாலா  ஒரு ஸ்பூன்,மல்லித்தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/4ஸ்பூன், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்  மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக  கிளறி விடவும்.
  8. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள தக்காளி  விழுதை நன்றாக  கிளறி விடவும்.
  9. இதனுடன் ஒரு கப் தயிர் மற்றும் சிறிதளவு கஸ்தூரி மேத்தியை போட்டு நன்றாக  கிளறி விடவும்.
  10. இதனுடன் எண்ணெயில் பொறித்த பன்னீர் துண்டுகளை போட்டு
  11. நன்றாக  கிளறி விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான பன்னீர் மசாலா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago