எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
மலாய் கோப்தா கறி
Cooking time in minutes:
30
Ingredients:
மலாய் கோப்தா கறி செய்யத் தேவையான பொருள்கள்;
- பன்னிர் – 10 கிராம்.
- முந்திரி அரைத்த விழுது - 100 கிராம்.
- மைதா - 1 ஸ்பூன்.
- அவித்த உருளை கிழங்கு -1.
- ரீபைன்ட் ஆயில் - 5 ஸ்பூன்.
- அமுல் குக்கிங் கிரீம் 2 ஸ்பூன்.
- மல்லி தூள் -1 ஸ்பூன்.
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 4 ஸ்பூன்.
- வெண்ணெய் - தேவையான அளவு.
- சோள மாவு 1 ஸ்பூன்.
- நெய் – 2 ஸ்பூன்.
- சர்க்கரை- 2 ஸ்பூன்.
- முந்திரிப்பருப்பு -5.
- பொடியாக நறுக்கிய பூண்டு – 1 ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு உருளைகிழங்கை அவித்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் முந்திரிப்பருப்பு 50கிராம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பன்னிர் 10 கிராம், சோள மாவு 1 ஸ்பூன், மைதா 1 ஸ்பூன்,அவித்த உருளை கிழங்கு ஒன்று, நெய் 1 ஸ்பூன், வெண்ணெய் 1 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு போட்டு நன்றாக மசித்து பின்னர் சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரீபைன்ட் ஆயில் 2 ஸ்பூன் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் உருண்டையாக உருட்டி வைத்தவற்றை, ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது, எடுத்து விடலாம்.
- அடுப்பில் கடாய் வைத்து ரீபைன்ட் ஆயில் 3 ஸ்பூன் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு 1 ஸ்பூன் போட்டு நன்கு வதக்கவும்.
- 5 முந்திரிப்பருப்பை போட்டு வதக்கவும்.
- மிக்சி ஜாரில் அரைத்து வைத்த முந்திரிப்பருப்பு விழுது 2 ஸ்பூன் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,சிறிதளவு உப்பு போட்டு 2 நிமிடம் கலந்து விடவும்.
- இதனுடன் சர்க்கரை 1 ஸ்பூன், நெய் 1 ஸ்பூன்,வெண்ணெய் சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
- சீரகத்தூள் 1/4 ஸ்பூன்,மல்லி தூள் 1/4 ஸ்பூன், மற்றும் பொரித்து வைத்துள்ள கோப்தா உருண்டை களை போட்டு 2 நிமிடம் கலந்து விடவும்.
- அடுப்பில் இருந்து இறக்கி வேறு ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
- சிறிதளவு அமுல் குக்கிங் கிரீம் ஊற்றி,சிறிதளவு வெண்ணெய்யை வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி விடவும்.
- சுவையான மலாய் கோப்தா கறி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


