முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெண்டைக்காய் முட்டை பொரியல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

வெண்டைக்காய் முட்டை பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை – 7.
  2. வெண்டைக்காய் - 150 கிராம்.
  3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.
  4. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  5. வினிகர் - 1/2 ஸ்பூன்.
  6. வெள்ளை மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  7. எண்ணெய் – 1 கரண்டி.
  8. உப்பு - தேவையான  அளவு.
Method: 

செய்முறை ;--

  1. 150 கிராம் வெண்டைக்காயை எடுத்து முன்புறம் மற்றும் பின்புறம் சிறிதளவு வெட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு லிட்டர்  தண்ணீர் ஊற்றவும்,தண்ணீர் சூடானவுடன் சிறிதளவு உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன் வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயை போட்டு சிறிது நேரம் வேக வைத்து எடுத்து பின்னர் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் 7 முட்டையை உடைத்து  ஊற்றவும்,இதனுடன் பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்,1/2 ஸ்பூன் மிளகு தூள்,வினிகர் 1/2 ஸ்பூன்,வெள்ளை மிளகு தூள் 1/2 ஸ்பூன்,உப்பு தேவையான  அளவு போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை 
  6. எடுத்து க்கொள்ளவும்,இதனுடன்  தயார் செய்து வைத்துள்ள முட்டைக்கலவையை  ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து ஒரு கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள வெண்டைக்காய் போட்டு கலந்த முட்டைக்கலவையை ஊற்றி நன்றாக கலந்து விடவும்..
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான வெண்டைக்காய் முட்டை பொரியல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago