முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கால் வலி,கால் குடைச்சல்,கால் எரிச்சல் நீங்க இயற்கை மருத்துவம்

  1. ரத்த ஓட்டம் குறைவதுதான் கால் வலி,கால் எரிச்சல் மற்றும் கால் குடைச்சலுக்கு முக்கிய காரணம். 
  2. குளிர்காலத்தில் உடல் மந்தமாக, சோம்பேறித்தனதமாக இருக்கும். 
  3. தினமும் சில துளிகள் கடுகு எண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும்.
  4. மூட்டு பிரச்சனைகளின் சிறந்த வலி நிவாரணியாக பூண்டு விளங்குகிறது.
  5. பூண்டு தண்டுவட உறையழற்சிக்கு சிறந்த மருந்தாகிறது.
  6. பிரண்டையில் அதிகளவில் கால்சியச்சத்து உள்ளது. அது எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. இதனால் கால் வலி,கால் எரிச்சல் மற்றும் கால் குடைச்சல் ஆகியவை குணமாகிறது.
  7. இவை அனைத்தையும் சேர்த்து ஒரு வலி நிவாரணியை தயார் செய்யலாம்.
  8. இதற்கு தேவையான பொருட்கள் பிரண்டை 50 கிராம்,சுக்கு 25 கிராம்,பூண்டு 5 பல்,கடுகு எண்ணெய் 100 மில்லி எடுத்து கொள்ளவும்.
  9. ஒரு கடாயில் 100 மில்லி கடுகு எண்ணெய் ஊற்றி குறைவான தணலில் நன்றாக சூடுபடுத்திய பின்னர் அதில் இடித்த பூண்டு மற்றும் பிரண்டையை போட்டு கொதிக்க வைத்து சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி ஆறவைத்து பயன்படுத்தி வரவும்.
  10. கால் வலி,கால் குடைச்சல்,கால் எரிச்சல் போன்ற பல்வேறு வலிகளுக்கு 10 சொட்டு எண்ணெய்யை ஊற்றி லேசாக  தேய்த்து  வந்தால் வர நல்ல வலி நிவாரணியாக இந்த எண்ணெய் செயல்படும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்