முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வேனல்கட்டி,வேர்க்குரு நீங்க வீட்டு மருத்துவம்

  1. வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும்.
  2. கோடைகாலத்தில் வரக்கூடிய வேர்க்குரு பிரச்சனையை சரியான முறையில் கையாண்டால் வேர்க்குருவை தடுத்துவிடலாம்
  3. வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். 
  4. வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்,கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
  5. சந்தனத்தை பன்னீர் கொண்டு குழைத்து உடைந்த கொப்புளங்கள் இருக்கும் இடங்களில் தடவி விடுவது சருமத்தை குளிர்விக்க செய்யும்.
  6. தினமும் இரு முறை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
  7. வியர்வை என்பதே உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும் நிலை தான். இது சருமத்துளைகள் வழியாக வெளியேறும். இந்த துளைகள் அடைக்கும் போதுதான் வியர்வை தங்கி சிறு சிறு கொப்புளங்களாக சிவப்பு நிறத்தில் வெளிப்படும்.
  8. வேர்க்குரு சிவப்பு நிறத்தில் அரிப்பும் நமைச்சலும் கொண்டு அதிக அசெளகரியத்தை உண்டாக்கும். 
  9. உடலில் நீரேற்றம் குறையாமல் தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை தவிர்க்க செய்யும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வியர்வையையும் உஷ்ணத்தையும் தணிக்கும்.
  10. கோடையில் கிடைக்கும் நுங்கு அதிகம் சேர்க்கலாம், தினசரி இளநீர் குடிக்கலாம், இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் தன்மை குறைந்து, வேர்க்குருவினால் ஏற்பட்ட அரிப்பும் சிவப்பு தோலும் மறைந்து விடும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago