முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி அதிபர்களின் ஸ்டிரைக் வாபஸ்

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கடந்த 5 நாட்களாக நீடித்த லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று விலக்கி கொள்ளப்பட்டது. மத்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஸ்டிரைக் வாபஸ் ஆனது.

சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இந்த வேலை நிறுத்தம் கடந்த 5 நாட்களாக நீடித்தது. இதனால் சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரியுடன் லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர லாரி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் படி ஸ்டிரைக் வாபஸ் ஆனது. இன்னும் சில நாட்கள் வேலை நிறுத்தம் நீடித்திருந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதும் கடினமாகி இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்