முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4வது டெஸ்ட்டில்இந்திய வீரர் ரகானே 127ரன் இந்தியா 334ரன் குவிப்பு

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

டெல்லி - தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் 4வது இறுதி கிரிக் கெட் டெஸ்ட்டில் இந்திய அணி வீரர் அஜின் கியா ரகானே 127ரன் குவித்தார். அவருக்கு இது 5வது டெஸ்ட் சதமாகும். இந்திய அணி முதல் இன்னிங்சில் 334ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி முதல் இன்னிங்சில் 121ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 4வது இறுதி கிரிக் கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் வேகமாக அவுட் ஆனதால் முதல் இன்னிங்சில்  இந்தியா சொற்ப ரன்களுக்குள் சுருண்டு விடும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ரகானே அற்புதமாக ஆடி ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் .

இந்திய அணியின் காப்டன் விராத் கோலி 44 ரன் அடித்து இருந்தார் . இந்த இரு வீரர்களைத்தவிர இதர 5 இந்திய வீரர்கள் முதல் நாளின் போது விரைவாக அவுட் ஆகி இருந்தனர். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 7விக் கெட்டுகளை இழந்து 231ரன் எடுத்திருந்தது. முதல் நாளன்று  89ரன்னுடன் களத்தில் இருந்த ரகானே நேற்றைய ஆட்டத்தின் போதும் அற்புதமாக ஆடி ரன்களை குவித்தார். அவர் 215பந்துகளில் 127 ரன்களை எடுத்தார். 

அவருக்கு இது 5வது டெஸ்ட் சதமாகும்.அவரது ரன்னில்  11பவுன்டரிகள் மற்றும்  2சிக்சர்கள் இடம் பெற்றிருந்தன. அவரும் அஸ்வின் ரவிச்சந்திரனும் 8வது விக்கெட்டுக்கு 193 பந்துகளில் 98ரன்களை சேர்த்தனர். ரகானேவின் விக் கெட்டை இம்ரான் தாகிர் வீழ்த்தினார். அவரது பந்து வீச்சை  ரகானே ஆடியபோது அது கேட்சாக டிவில்லியர்சிடம் சென்றது. நேற்று மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக் கெட்டை மட்டும் இழந்திருந்தது. அப்போது அஸ்வின் 53ரன்னுடன் களத்தில் இருந்தார்.

அவர் மேலும் 3ரன்கள் சேர்த்த நிலையில் 56ரன்னுக்கு அவுட் ஆனார் . அவரது விக்கெட்டை  அபாட் கைப்பற்றினார். இதனை யடுத்து கடைசியாக ஆட வந்த இஷாந்த் சர்மா  தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் அபாட்டிடமே அவுட் ஆனார் . இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது.அபாட் 40ரன்களுக்கு 5விக் கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 121ரன்னுக்கு சுருண்டது. அஸ்வின் 30ரன்னுக்கு 5விக் கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்