முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமுறைகளை மீறியதாக 73 டிவி சேனல்கள், 23 எப்.எம். ரேடியோ சேனல்களின் உரிமங்கள் ரத்து

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - விதிமுறைகளை மீறியதாக நாடு முழுவதிலும் உள்ள 73 டிவி சேனல்கள் மற்றும் 23 எப்.எம். ரேடியோ சேனல்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் 892 தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. இது தவிர, 42 தனியார் எப்.எம் ரேடியோ சேனல்களுக்கும், 196 சமுதாய வானொலி நிலையங்களுக்கும் மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விதிமுறைகளை மீறியதாக 73 தொலைக்காட்சி சேனல்கள், 24 எப்.எம். ரேடியோ சேனல்கள் மற்றும் 9 வார-மாத இதழ்களுக்கு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

அச்சு ஊடகங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள பி.ஆர்.பி. சட்டம் 1897-க்கு மாற்றாக பி.ஆர்.பி.பி. மசோதாவை கொண்டு வருவதற்கான முயற்சிகளை துவங்கிவிட்டதாகவும் ராஜ்யவர்த்தன் ரத்தோர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்