முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டங்கள் - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சித்தேர்தல் பணிகள் தொடர்பாக வரும் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மாவட்ட வாரியாக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-

அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் கழக அரசின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை தொழிலாளர்களிடையே, பொதுமக்களிடையே விளக்குதல், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பணிகள், இணைப்புச் சங்கங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்.

அதன் விபரம் வருமாறு:-

10-ம் தேதி காலை 10 மணி - நாகர்கோவில், மாலை 4 மணி - திருநெல்வேலி, 11-ம் தேதி காலை 10 மணி - மதுரை, மாலை 4 மணி - திண்டுக்கல், 13-ம் தேதி காலை 10 மணி -கோவை, மாலை 4 மணி - ஈரோடு, 14-ம் தேதி காலை 10 மணி - தருமபுரி, 4 மணி - சேலம், 17-ம் தேதி காலை 10 மணி - திருச்சி, மாலை 4 மணி - காரைக்குடி, 18-ம் தேதி காலை 10 மணி - கும்பகோணம், மாலை 4 மணி - கடலூர், 20-ம் தேதி காலை 10 மணி - விழுப்புரம், மாலை 4 மணி - திருவண்ணாமலை, 21-ம் தேதி காலை 10 மணி -வேலூர், மாலை 4 மணி - காஞ்சிபுரம், 22-ம் தேதி காலை - சென்னை ஆகிய இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும்.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னசாமி தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணாதொழிற்சங்கச் செயலாளர்கள், போக்குவரத்துப் பிரிவு மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago